'

க.பொ.த உயர்தர பரீட்சை 2021 (2022) நடைபெறும் காலத்தில் ஆரம்பப்பிரிவு வகுப்புகள் நடாத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.


2021 க.பொ.த உயர்தர பரீட்சை நடைபெறும் 07.02.2022 தொடக்கம் 05.03.2022 வரையிலான காலப்பகுதியினைக் கருத்திற் கொண்டு, 2022.02.04 தொடக்கம் 2022.03.06 வரை பாடசாலை விடுமுறை வழங்கப்படும். குறித்த காலப் பகுதியில் ஆரம்பப் பிரிவு வகுப்புகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாது.


மேற்படி காலப்பகுதியில் ஆரம்பப் பிரிவு வகுப்புகளுக்கு விமுறை வழங்கப்படாத போதிலும், பரீட்சை செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் நிலைமையுள்ள பாடசாலையாயின், உரிய பாடசாலை அதிபர்கள், வலயக்கல்வி அலுவலகத்தினூடாக மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அது தொடர்பில் அறியப்படுத்தல் வேண்டும். குறித்த பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு வகுப்புகளுக்கும் விடுமுறை வழங்குவது தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் மேற்படி மாணவர்களுக்கு ஒப்படை வழங்கும் வகைகளில் கற்பித்தல் முறைகள் பயன்படுத்தப்படல் வேண்டும்.


அதே போன்று பரீட்சை கடைமகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியதால், அதற்கு தேவையான ஆசிரியர்களை பரீட்சை கடமைகளுக்கு விடுவிக்குமாறு அதிபர்கள் வேண்டிக் கொள்ளப்பகின்றனர்.