'

முகாமைத்துவ சேவை போட்டிப் பரீட்சை 2022 ஜூலை மாதத்தில்அரச முகாமைத்துவ சேவை (திறந்த) போட்டிப்பரீட்சை ஜூலை மாதம் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்ள்ளார்.

20 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது இதனை அவர் தெரிவித்தார்.

திறந்த போட்டிப் பரீட்சை நடைபெறும் தினம் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் , வெகு விரைவில் வௌியிடப்படும் என்பதையும் அவர் தெரிவித்தார். பாடசாலை பரீட்சைகள் 3, குறுகிய காலத்திற்கும் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டி ஏற்பட்டதால் பரீட்சைகள் சிலவற்றை பிற்போடப்படவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மூலம் : News.lk