'

ஜுலை 10 வரை தபால் அலுவலகங்கள் வாரத்திற்கு மூன்று நாள் மாத்திரமே2022 ஜூலை 10 வரை தபால் அலுவலகங்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே இயங்கும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. வாரந்தோறும் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய தினங்களில் மாத்திரம் செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

தபால் சேவை அத்தியாவசிய சேவை பட்டியலில் உள்ளடக்கப்படாததால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் நலன் கருதி மூன்று நாட்கள் செயற்படத் தீர்மானித்துள்ளதாகவும் தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.