'

ஜூலை 25 முதல் பாடசாலைகள் நடைபெறும் விதம்




எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவிருந்த போதிலும், நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரமணாக அது பிற்போடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.


25 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் பொது பின்வரும் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படல் வேண்டும்.


2022 ஆம் கல்வியாண்டின் முதலாம் தவணை செப்ரம்பர் 07 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.


தரம் 1 தொடக்கம் 11 வரையிலான மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டிய அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகள் திருத்தியமைக்கப்பட்டு வழங்கப்படும். அதற்கேற்ப 25 ஆம் திகதி முதல் கற்பித்தல் நடவடிக்ைககள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

முதலாம் தவணைப் பரீட்சைகள் நடாத்தப்பட மாட்டாது. அலகு ரீதியிலான மதிப்பீடுகள் நடாத்தப்பட்டு, மாணவர்களின் பிரச்சினைகள் அடையாளப்படுத்தப்பட்டு தீர்க்கப்படல் வேண்டும்.

மீள அறிவிக்கப்படும் வரை பாடசாலைகள் திங்கள், செவ்வாய், மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் வழமை போன்று நடைபெறல் வேண்டும். புதன் மற்றும் வௌ்ளி ஆகிய தினங்களில் வீட்டிலிருந்து கற்க ஏற்பாடுகள்  மேற்கொள்ளப்படல் அல்லது நிகழ்நிலை கற்பித்தல் நடைபெறல் வேண்டும்.

குறித்த மூன்று நாட்களும் அனைத்து பாடங்களும் நடைபெறும் வகையில் நேர அட்டவணை தயாரிக்கப்படல் வேண்டும்.


பாடசாலைக்கு வருகின்ற சமயங்களில் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்களின் தாமதம் தொடர்பில் சலுகைகள் வழங்கப்படல் வேண்டும்.

மாணவர்களின் சீறுடை மற்றும் பாதணிகள் தொடர்பாக மாணவர்களின் வருகை தடைபடாத வண்ணம் செயல்பட வேண்டும். 

பாடசாலை நேரத்தில் மற்றும் அதிகளவு பணம் செலவழித்து கற்றல் நடவடிக்கைகளுக்கு புறம்பான செயற்பாடுகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

கற்றல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அகில இலங்கை ரீதியிலான போட்டிகளுக்கு மாணவர்களை தயார்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.


நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக மாணவர்கள் பௌதீக மற்றும் உளவியல் ரீதியாக நெருக்கடி நிலைக்கு உள்ளாகி இருக்க வாய்ப்புகள் இருப்பதால் அவர்கள் தொடர்பில் விசேட அவதானத்தைச் செலுத்தி வளமான கற்றல் சூழலை பாடசாலைகளில் ஏற்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தவும்.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடைகளின்றி தொடர்ச்சியாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவும்.