'

2021 உயர்தர மாணவர்களின் பாடசாலை காலத்தை உறுதி செய்தல்2021/2022 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை வௌியிட மாணவர்களின் பாடசாலை காலம் தொடர்பான தகல்களை வழங்க பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை தீர்மானிக்க பாடசாலை விண்ணப்பதாரிகளின் மாவட்டத்தை தீர்மானிக்க, அவர்கள் உயர்தர பரீட்சை எழுதிய பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்தல் பயன்படுத்தப்படும்.

இவ்விடயத்தை விரைவுபடுத்தும் நோக்கில் 2021 உயர்தர மாணவர்களின் பாடசாலை காலத்தை உறுதிப்படுத்த நிகழ்நிலையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாடசாலை அதிபர்கள் பரீட்சைத் திணைக்களத்தினால் தமக்கு வழங்கப்பட்டுள்ள Username மற்றும் Password இனை பயன்படுத்தி 2021 ஆம் வருட உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களின் பாடசாலை காலத்தை உறுதிப்படுத்தல் வேண்டும்.

இறுதித்திகதி 15 ஆகஸ்ட் 2022

மேலதிக தகவல்கள் குறித்த இணையத்தளத்தில் வழங்கப்பட்டுள்ளன.

நிகழ்நிலையில் 2021 உயர்தர பாடசாலை மாணவர்களின் பாடசாலை காலத்தை உறுதி செய்ய பின்வரும் இணைப்பை அழுத்தவும்