'

பாடசாலையின் தரவு அலுவலர் ஒருவரை நியமித்தல்



பாடசாலைகளில் தரவு அலுவலர் ஒருவரை நியமித்தல் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் வௌியிடப்பட்ட 2022.11.15 ஆம் திகதிய கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

பாடசாலையின் தரவு அலுவலர் பின்வரும் அடிப்படையில் நியமிக்கப்படல் வேண்டும்.

மாணவர்களின் எண்ணிக்கை 500 எனின் - 1 தரவு அலுலவர்

பாடசாலையில் தற்போது கடமையிலுள்ள பொருத்தமான கல்விசார் அல்லது கல்விசாரா ஊழியர் ஒருவர் நியமிக்கப்படல் வேண்டும். அவருக்கு வழங்கப்பட்டுள்ள கடமைக்கு மேலதிகமாக இதனையும் செய்தல் வேண்டும்


மாணவர்களின் எண்ணிக்கை 501 - 1000 எனின் - அலுவலர் ஒருர்

பாடசாலையில் தற்போது கடமையிலுள்ள பொருத்தமான கல்விசாரா ஊழியர் ஒருவர் நியமிக்கப்படல் வேண்டும். அவருக்கு வழங்கப்பட்டுள்ள கடமைக்கு மேலதிகமாக இதனையும் செய்தல் வேண்டும்


மாணவர்களின் எண்ணிக்கை 1001-3000 எனின் - அலுவலர் இருவர்

பொருத்தமான கல்வி சாரா ஊழியர் ஒருவர் இதற்கு முழுமையாக ஈடுபடுத்தப்படல் வேண்டும், இன்னுமொருவர் தனக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளுக்கு மேலதிகமாக இப்பணிக்கு நியமிக்கப்படல் வேண்டும்

மாணவர்களின் எண்ணிக்கை 3000 க்கு மேல் எனின், - இருவர்

இருவர் பூரணமாக இப்பணிக்கு நியமிக்கப்படல் வேண்டும்.


தரவு அலுவலரின் பணிகள்

  • பாடசாலையின் அனைத்து தரவுகளையும் சேர்த்தல்
  • தரவுகளை சேகரிப்பதற்கு தேவையான ஆவணங்கள், அறிவுறுத்தல்களி, வினாக்கொத்துகள் என்பவற்றை திட்டமிடல் மற்றும் தயாரித்தல்
  • பாடசாலையின் தரவுகளை கோவைப்படுத்தி இற்றைப்படுத்தி வைத்தல்
  • பாடசாலையில் சேகரிக்கப்படும் தரவுகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தல்
  • தேவைப்படும் சந்தர்ப்பங்களில் கணினி முறைமைக்கு அல்லது தரவுத்தளத்திற்கு பாடசாலையின் தரவுகளை சமர்ப்பித்தல் மற்றும் தரவுகளின் செம்மையை உறுதிப்படுத்தல்
  • சேகரிக்கப்பட்ட தரவுகள் மற்றும் முறைவழிப்படுத்தப்பட்ட தகவல்களை அதிபருக்கு அல்லது அதிபர் பெயரிடும் நபருக்கு பரிசீலிக்க வழங்குதல்
  • 1000 மாணவர்களுக்கு மேற்பட்ட பாடசாலைகளின் தரவுகளை சரிபார்ப்பதற்கு அடுத்த தரவு அலுவலர் பொறுப்பாகும். 1000 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பாடசாலைகளின் தரவு அலுவலர் உள்ளீடு செய்த தரவுகளின் செம்மையை பரீட்சிப்பது அதிபரினால் குறிப்பிடப்படும் பிரதி அதிபர், உதவி அதிபர் அல்லது சிரேஸ்ட ஆசிரியருக்கு பொறுப்பாகும்.
  • சேகரிக்கப்பட்ட தரவுகளின் காப்புப் பிரதி ஒன்றினை வைத்திருத்தல்
  • தனது பொறுப்பிலுள்ள தரவுகளுக்கு சுட்டியினை நடைமுறைப்படுத்தல்
  • பாடசாலையின் தரவு தொடர்பில் உரிய பிரிவுகளுடன் ஒருங்கிணைதல்
  • அதிபரின் அறிவுறுத்தல்களுக்கமைய தேவையான தரவு மற்றும் தகவல் உள்ளடக்கிய அறிக்கை தயாரித்தல் மற்றும் உரிய பிரிவுகளுக்கு சமர்ப்பித்தல்
  • பாடசாலை தரவு தொடர்பான சுற்றறிக்கை மற்றும் அறிவுறுத்தல்களை கோவைப்படுத்தி வைத்தல்
  • தரவு தொடர்பில் அன்றாடம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் , மாற்றங்கள் மற்றும் அதிபர் அல்லது உயர் ,அதிகாரி மூலம் கிடைக்கப்பெறும் அறிவுறுத்தல்கள் தொடர்பில் குறிப்புகளை பேணுணவதற்காக லொக் புத்தகம் ஒன்றினை நடைமுறைப்படுத்தல்
  • ஒவ்வொரு நாளும் லொக் புத்தகத்தை ஒவ்வொரு நாளும் இற்றைப்படுத்துவதுடன், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அதிபரின் மேற்பார்வைக்காக சமர்ப்பித்து தேவையான அறிவுறுத்தல்களைப் பெற்றுக் கொள்ளல்
  • தரவு மற்றும் தகவல்ளின் இரகசியத்தன்மையை பாதுகாப்பதுடன், அவற்றின் இரகசியத்தன்மையை பாதுகாப்பதற்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளையும் மேற் கொள்ளல்
  • தரவு தொடர்பில் கோட்ட, வலய மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் நடைபெறும் பயிற்சி வேலைத்திட்டங்கள், கருத்தரங்குகள், அறிவுறுத்தல்கள் மற்றும் கூட்டங்களுக்கு அதிபரின் பணிப்பின் பேரில் கலந்து கொள்ளல்.
  • இடமாற்றம் அல்லது வேறு காரணங்களுக்காக பாடசாலையில் தரவு அலுவலர் கடமையிலிருந்து விலக நேரிடின், அதிபரினால் குறிப்பிடப்படும் பதிலாளருக்கு தனது பொறுப்பிலுள்ள அனைத்து தரவுகள், கோவைகள், பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் என்பவற்றை முறையாக பொறுப்பளிப்பதுடன் புதிய தரவு அலுவலருக்கு அவரது கடமைகளை முன்னெடுத்துச் செல்ல தேவையான அடிப்படை அறிவு மற்றும் பயிற்சிகளை வழங்கல்
  • தனது பொறுப்பிலுள்ள தரவு அல்லது தகவல்களில் காணாமல் போயிருந்தால், மாற்றத்துக்குள்ளாகி இருந்தால், முறையற்ற பாவனைக்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் அல்லது வேறு மோசடி நடவடிக்கைளுக்கு உட்பட்டிருப்பதை அறியக் கிடைத்தால் உடனடியாக அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்து லொக் புத்தகத்தில் குறித்துக் கொள்ளல் வேண்டும்.
  • தேவையேற்படின் பாடசாலை அமைந்துள்ள வலயத்திலுள்ள பிரிதொரு பாடசாலையின் தரவு உள்ளீடு மற்றும் பகுப்பாய்வுக்கு உதவுதல்