'

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவ அனுமதி

 


தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றினை வௌியிட்டுள்ளது.

கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் அமைச்சரவை உப குழுக்களுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதுடன், 2024 ஜனவரி தொடக்கம் சம்பள முரண்பாட்டினை தீர்க்க  கொள்கையளவில் தீர்ப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே போன்று கல்வியியற் கல்லூரிகளிலுள்ள அடிப்படை வசதிகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக உலக வங்கியின் GEM  செயற்றிட்டத்துடன் கலந்துரையாடி உடனடி திருத்தப் பணிகள் மற்றும் பராமரிப்பு விடயங்களுக்கு நிதி ஒதுக்கீட்டுக்கு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன.

அதனால் கல்வியியற் கல்லூரி அனுமதி மற்றும் புதிய மாணவர்களை பதிவு செய்தல் என்பன 10 ஆகஸ்ட் 2023 ஆம் திகதியன்று ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியியற் கல்லூரி அதிபர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.