'

மத்திய மாகாண பரீட்சைகள் (ஆண்டிறுதி மற்றும் முன்னோடிப் பரீட்சை 2020)


சிங்கள ஆவண மொழிபெயர்ப்பு (மூல ஆவணம் சிங்களத்தில்)

க.பொ.த சாதாரண தர (2020) மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை மற்றும் தரம் 6 - 10 (2020) மாணவர்களுக்கான ஆண்டிறுதிப் பரீட்சைத் தொடர்பாக மத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்தல் ஒன்றை வௌியிட்ள்ளது.

மேற்படி பரீட்சை தொடர்பான வினாத்தாள்கள் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. guruwaraya.lk

க.பொ.த சாதாரண தர (2020) முன்னோடிப் பரீட்சை

இப்பரீட்சை எதிர்வரும் 01.02.2021 ஆம் திகதி மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு நடாத்தப்படும். guruwaraya.lk

விடைத்தாள்கள் விரைவாக திருத்தப்பட்டு தேவையான பிரதியுபகார, பின்னூட்டல்கள் வழங்கப்படல் வேண்டும்.

6-10 தரங்களுக்கான வார இறுதிப் பரீட்சை

2020 ஆம் ஆண்டு தரம் 6,7,8,9,10 மாணவர்களின் அடைவு மட்டத்தை அடையாளம் காண்பதற்காக மேற்படி பரீட்சை நடாத்தப்படும்

இப்பரீட்சை எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி ஆரம்பமாகும். மாணவர்கள் பெற்றோரின் மேற்பார்வையின் கீழ், வீட்டில் இருந்து பரீட்சை எழுத வேண்டும். guruwaraya.lk

மாணவர்களின் அடைவு மட்டங்களை அறிந்து கொள்வதற்காகவே மேற்படி பரீட்சை நடாத்தப்படுகின்றது. மேற்படி பரீட்சை மூலம் பின்வரும் குறிக்கோள்கள் அடையப் பெறல் வேண்டும்.

guruwaraya.lk

  1. சுய ஒழுக்கத்தின் அடிப்படையில் பரீட்சைத்தாளுக்கு  விடை எழுதும் திறனை விருத்தி செய்தல்
  2. மாணவர்களின் மதிப்பீட்டுக்காக பெற்றோரின் பங்களிப்பினை உயிர்ப்பாக பெற்றுக் கொள்ளல்.
  3. கோவிட் நிலைமைகளின் கீழ் தவறவிடப்பட்ட கற்றல் காலத்தை, உச்ச அளவில் மாணவர்களுக்கு வழங்கும் நிலைமைகளை ஏற்படுத்தல்
  4. புதிய சாதாரண நிலைமைகளின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பாக வலயக்கல்வி அலுவலகம் மற்றும் பாடசாலை சமூகம் மூலம் மேற்கொள்ளப்படும் முயற்சிகளினூடு பண்புத்தரத்தினை அதிகரித்தல்  guruwaraya.lk

முழுச்செயற்றிட்டத்தையும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அபிவிருத்திப் பிரிவு (0714 981 764) இனையும், நேர அட்டவணை, வினாத்தாள் சம்பந்தமாக மாகாண பரீட்சை பிரிவையும் தொடர்பு கொள்ளவும். guruwaraya.lk

பரீட்சை நேர அட்டவணை கீழே இணைக்கப்பட்டுள்ளது.