'

க.பொ.த சாதாரண தர (2020) ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சின் அறிவித்தல்



பாடத்திட்டம் நிறைவு செய்தல் தொடர்பாக மீண்டும் தகவல்களைத் திரட்டல்

மேல் மாகாணம் உட்பட அனைத்து பாடசாலைகளிலும் 2020 ஆம் ஆண்டு சாதாரண தர மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, தமது பாட அலகுகளை நிறைவு செய்தமை தொடர்பாக தகவல்களை வழங்குமாறு கல்வி அமைச்சு வேண்டிக் ​கொள்கின்றது.  ஜனவரி 20, 2021 ஆம் திகதி கல்வி அமைச்சினால் இவ்வறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. 

யாரும் ஒரு ஆசிரியருக்கு தனது தகவல்களை இற்றைப்படுத்துவதில் சிரமங்கள் இருப்பின் அவர்கள் தம் தகவல்களை (பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், பாடசாலையின் பெயர், கல்வி மாகாணம், கல்வி வலயம் மற்றும் தொலைபேசி இலக்கத்தினை) grade11@moe.gov.lk என்ற ஈ மெயில் முகவரிக்கு ஈமெயில் பன்னுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பாட ஆசிரியர்களினால் சரியான தகவல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் அதே வேளை மேல் மாகாண பாடசாலைகளின் (தேசிய, மாகாண) அனைத்து ஆசிரியர்களும் தமது தகவல்களை வழங்க வேண்டும் என கல்வி அமைச்சி வேண்டிக் கொள்கின்றது.

தகவல்கள் பின்வரும் நிகழ்நிலை இணைப்பின் மூலம் வழங்கப்படல் வேண்டும். தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை உட்செலுத்தி படிவத்தினை நிரப்பலாம்.

நிகழ்நிலை படிவம்