'

தரம் 6 ற்கு மாணவர்களை சேர்த்தல்




சிங்கள மூல ஆவணத்தின் மொழிபெயர்ப்பு 

தரம் 6 இற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பாக கல்வி அமைச்சு விளக்கம் ஒன்றை வௌியிட்டுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் மாணவர்களை தரம் 6 இற்கு அனுமதித்தல் guruwaraya.lk

பாடசாலைகளுக்கு தரம் 6 இற்கு மாணவர்களை இணைக்கும் போது, தரம் 2 தொடக்கம் தரம் 11 வரை மாணவர்களை பாடசாலையில் இணைத்தல் சம்பந்தமாக 2008.09.19 ஆம் திகதி வௌியிடப்பட்ட 2008/37 ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் 4 ஆம் உறுப்பின் படியும், அதன் திருத்தமான 2018.02.16 ஆம் திகதிய 2018/03 ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் பிரகாரமும் 2018.12.19 ஆம் திகதிய ED/01/12/15/02/04 இலக்க அறிவுரை கடிதத்திற்கேற்ப மேற்கொள்ளப்படல் வேண்டும். guruwaraya.lk

அதனடிப்படையில் தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் கவனத்திற் கொள்ளப்படும். பாடசாலைகளிலட நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை, பாடசாலைகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் புள்ளிகள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை என்பவற்றின் அடிப்படையில் பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகள் தீர்மானிக்கப்படும். இது பாடசாலைக்கு பாடசாலை வேறுபடும். guruwaraya.lk

பிரபல பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஏற்ப புலமைப்பரிசில் சித்தியடைந்தவர்கள் விண்ணப்பித்த பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் மூலம் மாணவர் சேர்ப்பு நடைபெறும்.

புலமைப்பரிசில் சித்தியடைந்தவர்களுக்கு மேலதிகமாக,

1. ஆரம்பப்பிரிவு உள்ள பாடசாலைகளில் 6ஆம் தரத்திற்கு அப்பாடசாலையில் உள்ள அனைத்து மாணவர்களும் அவர்கள் பெற்ற புள்ளிகளைக் கருத்திற்கொள்ளாது , இணைத்துக் கொள்ளப்படுவர். guruwaraya.lk

2. ஒரு பாடசாலைக்கு போசித்த பாடசாலைகள் (ஊட்டப் பாடசாலைகள்) இணைக்கப்பட்டு இருப்பின் அப்பாடசாலையில் உள்ள மாணவர்கள் இப்பாடசாலைக்கு இணைத்துக் கொள்ளப்படுவர். guruwaraya.lk


தரம் 6 இல் ஆரம்பிக்கும் பாடசாலைகள் (ஆரம்பப்பிரிவு அற்ற பாடசாலைகள்)

3/2018 சுற்றறிக்கைக்கு அமைவாக, ஆரம்பப்பிரிவு அல்லது ஊட்டப் பாடசாலைகள் இல்லாதவிடத்து, முழு மாணவர் எண்ணிக்கையில் 85 வீதம் புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையிலும், மிகுதி 15 வீதம் வெட்டுப்புள்ளிகளை கடந்த பழைய மாணவர்களின் பிள்ளைகள், சகோதரர்கள், கல்வி சார் ஊழியர்கள் என்ற அடிப்படையிலும் பூர்த்தி செய்யப்படும். அந்த 15 வீதத்திற்கான விண்ணப்பங்கள் பாடசாலை ரீதியில் கோரப்பட்டு நேர்முகப் பரீட்சை வைக்கப்பட்டு உயர் புள்ளிகளைப் பெற்றோரின் பெயர் பட்டியல் கல்வி அமைச்சிற்கு அனுப்பப்பட்டு அனுமதி பெறப்படல் வேண்டும். guruwaraya.lk