'

முக்கிய அறிவிப்பு : டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்தல் அறிவிப்பு திருத்தம்

 


தேசிய பாடசாலை மற்றும் வட மாகாண மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வது சம்பநதமாக கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

மேற்படி போட்டிப் பரீட்சை விரைவில் நடாத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளதால் நிகழ்நிலையில் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. எனவே ஏற்கனவே வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அவ்வறிக்கை குறிப்பிடுகின்றது.

2021.03.11 ஆம் திகதியில் இருந்து நிகழ்நிலையில் விண்ணப்பங்களை அனுப்ப முடியும். மேற்படி போட்டிப்பரீட்சைக்கு நிகழ்நிலையில் மாத்திரமே விண்ணப்பங்களை அனுப்புதல் வேண்டும். ஏற்கனவே மேற்படிப் போட்டிப் பரீட்சைக்கு பணம் செலுத்தியவர்கள், மீண்டும் நிகழ்நிலையில் விண்ணப்பிக்காது, அந்த விண்ணப்பதாரிகள் மாத்திரம் பதிவுத்தபாலில் தமது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்