'

​நெனச தொலைகாட்சி அலைவரிசை எண்ணிக்கை அதிகரிப்பு2018 ஆம் ஆண்டு தொடக்கம் நெனச தொலைகாட்சி அலைவரிசை இரண்டு சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல மாணவர்களுக்கு கல்வி ஔிபரப்பை வழங்கிக் கொண்டு வருகின்றன. டயலொக் நிறுவனத்தினால் , செட்டலைட் மூலம் ஔிபரப்பப்பட்டு வருகின்றன.
கிட்டத்தட்ட 2200 பாடசாசலைகளுக்கு இச்சேவை டயலொக் நிறுவனம் மூலம் இலவசமாக வழங்கப்படுகின்றது.

கொவிட் நிலைமைகளின் கீழ் கல்விச் செயற்பாடுகளை தொடராக மேற்கொண்டு செல்ல , நெனச கல்வி அலைவரிசைகளை மேலும் 2 அலைவரிசைகளினால் விஸ்தரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 7 ஆம் திகதி முதல் இவ்வலைவரிசைகள் நான்கும் தொழிற்படவுள்ளன. 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் இவ்வெண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்தான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது