'

21 ஆம் திகதி பாடசாலை ஆரம்பித்தல் தொடர்பான தென் மாகாண கல்வி அமைச்சின் அறிவித்தல்

21 ஆம் திகதி பாடசாலை ஆரம்பித்தல் தொடர்பான தென் மாகாண கல்வி அமைச்சின் அறிவித்தல்
vaathiyar.lk

கோவிட் நிலைமைகள் குறிப்பிட்டளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ் , சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் மாகாண சபைகளின் கீழ் இயங்கும் 200 க்கு குறைவான மாணவர்களைக் கொண்ட தரம் 1-5 வகுப்புகள் 2021.10.21 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளன.

எனவே தென் மாகாணத்தில் உள்ள 200 க்கு குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின்

அதிபர்கள்
ஆசிரியர்கள்
விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள்
பாடசாலைக்கு இணைக்கப்பட்டுள்ள பயிலுனர் பட்டதாரிகள்
கல்விசாரா ஊழியர்கள்
vaathiyar.lk

அன்றைய தினம் கட்டாயம் சமூகமளிக்க வேண்டும் என தென்மாகாண ஆளுநரின் கட்டளையின் படி அறியத்தருகின்றேன்.

vaathiyar.lk

யாதும் காரணமான அதிபர் வருகை தராதுவிடின் குறித்த பாடசாலையில் கடமைபுரியும் சிரேஸ்ட ஆசிரியர் அல்லது ஆசிரியை பாடசாலையின் கல்வி மற்றும் முகாமைத்துவ விடயங்கள் தொடர்பிலான தற்காலிக பதில் கடமையாற்றும் அதிபராக பாடசாலை நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்ல வலய மற்றும் கோட்ட கல்வி பணிப்பாளர்களுக்கு ஆளுநர் அதிகாரத்தை வழங்கியுள்ளமையையும் அறியத் தருகின்றேன்.
vaathiyar.lk

செயலாளர்
தென் மாகாண கல்வி அமைச்சு