'

பாடசாலை மீள ஆரம்பிக்க கல்விசார், கல்விசாரா ஊழியர்களை சேவைக்கு அழைத்தல்

பாடசாலை மீள ஆரம்பிக்க கல்விசார், கல்விசாரா ஊழியர்களை சேவைக்கு அழைத்தல்


  • ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் வருகை தரல் வேண்டும்
  • ஏனைய வகுப்பு ஆசிரியர்களை வாரம் இரு நாட்கள் அழைக்கலாம்
  • கர்ப்பிணிகள், 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளவர்கள், நோய்கள் உள்ளவர்களை அழைக்க அவசியமில்லை
  • 18.10.2021 ஊழியர்கள் அனைவரும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்
  • மாணவர்களுக்கு பாடசாலை சீறுடை அவசியமில்லை

கொவிட் நிலைமைகளின் கீழ் மூடப்பட்ட பாடசாலைகளை நான்கு கட்டங்களாக மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு முன்னராக அறிவித்திருந்தது. guruwaraya.lk

அதனடிப்படையில் முதற் கட்டமாக , 200 க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவை மாத்திரம் 2021.10.21 ஆம் திகதி ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
guruwaraya.lk

அடுத்த கட்டங்களில் ஏனைய பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் பின்னர் அறியத் தரப்படும். guruwaraya.lk

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான முன்னாயத்தம்

பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் கல்வி சார் ஊழியர்களின் தலைமையின் கீழ் கல்வி சாரா ஊழியர்கள் , தேவையேற்படின் பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் சமூகத்தின் உதவியினைப் பெற்றுக் கொண்டு பாடசாலைகளை சுத்தம் செய்தல், தொற்று நீக்கம் செய்தல், வகுப்பறைகளை தயார்படுத்தல் ஆகிய பணிகளை மேற் கொள்ளலாம்.
guruwaraya.lk

கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களை பணிக்கழைத்தல்

மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப வகுப்பறை முகாமைத்துவம் தொடர்பிலான திட்டமிடலின் அடிப்படையில் ஆரம்பப்பிரிவு வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் கல்விசார் ஊழியர்களை சேவைக்கு அழைக்க வேண்டும். அவர்களையும் குழுக்களாக ஒன்று சேர்வதை தவிர்க்கும் வகையில் பணிக்கு அழைத்தல் வேண்டும்.
guruwaraya.lk

மேற்படி வகுப்புகளுக்கு கற்பிக்காத கல்விசார் ஊழியர்களை பணி நிமித்தம் வாரம் இரு நாட்கள் பணிக்கு அழைக்க முடியும். பணிக்கு அழைக்காத நாட்கள் சொந்த லீவாக கருதப்படக்கூடாது.
guruwaraya.lk

பணிக்கு அழைக்கும் ஆசிரியர்களைத் தவிர ஏனைய கல்விசார் ஊழியர்கள் வசதிகள் இருப்பின் நிகழ்நிலை கற்பித்தலை மேற்கொள்ளல் வேண்டும். பணிக்கு அழைக்கப்படும் ஆசிரியர்களும், பணிக்கு அழைக்கப்படாத நாட்களில் நிகழ்நிலை கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும்.
guruwaraya.lk
கல்விசாரா ஊழியர்களை அதிபர் தேவைக்கேற்ப பணிக்கு அழைக்க முடியும்.

கர்ப்பிணிகள் மற்றும் ஒரு வயதுக்கு குறைந்த பிள்ளைகள் உள்ள ஊழியர்களை பணிக்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை, மற்றும் ஏனைய விசேட நோய்கள் உள்ள ஊழியர்களையும் தேவைப்படும் சந்தரப்பத்தில் மாத்திரம் அழைத்தல் வேண்டும். அதனை உறுதிப்படுத்தும் வகையில் உறுதிப்படுத்தும் ஆவணங்களை வேண்டுகோள் கடிதம் மூலம் வலயக் கல்வி காரியாலயத்தில் சமர்ப்பித்து முன்னனுமதி பெற்றுக் கொள்ளல் வேண்டும். guruwaraya.lk


மேற்படி விடயம் தொடர்பில், திட்டமிடல் மற்றும் ஆயப்படுத்தல் வேலைகளுக்காக பாடசாலையின் அனைத்து ஆளணியினரும் (வேறு மாகாணத்தில் உள்ளவர்கள், மேற்படி பணிக்கு அழைக்க விதிவிலக்கு வழங்கப்பட்டவர்கள் தவிர்ந்த) 2021.10.18 பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும். guruwaraya.lk

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் ஆரம்ப கட்டங்களில், விசேடமாக ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு பாடசாலை சீறுடை அவசியமன்று. ஏனைய மாணவர்களுக்கும் முறையான காரணங்கள் இருப்பின் அது தொடர்பில் செயற்பட முடியும்.
guruwaraya.lk