'

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்


சிங்கள கடிதத்தின் முக்கிய விடயங்கள் இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மாணவர்களின் எண்ணிக்கையினைக் கருத்திற்கொண்டு பாடசாலைகள் 4 கட்டங்களாக மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

முதல் கட்டம்
மாணவர் எண்ணிக்கை 200 இலும் குறைந்த பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு
வாத்தியார்.Lk

இரண்டாம் கட்டம்
மாணவர் எண்ணிக்கை 200 இலும் கூடிய பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு மற்றும் மாணவர் எண்ணிக்கை 100 இலும் குறைந்த அனைத்து வகுப்புகளும்

மூன்றாம் கட்டம்
அனைத்து பாடசாலைகளினதும் 10,11,12,13 மற்றும் மாணவர் எண்ணிக்கை 200 இலும் குறைந்த பாடசாலைகளின் அ னைத்து வகுப்புகளும்
வாத்தியார்.Lk

நான்காம் கட்டம்
அனைத்து வகுப்புகளுக்கும்


பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் பின்வரும் மூன்று விடயங்கள் கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.
  1. பாடசாலைகளை ஆரம்பிப்பிதற்கான முன்னாயத்தம்
  2. கற்றல் சூழலை சுகாதார பாதுகாப்பானதாக ஆயத்தப்படுத்தல்
  3. கற்றல் சூழலுக்கு ஏற்புடையதாக மாணவர்களின் உளநிலையை தயார்படுத்தல்
வாத்தியார்.Lk

வகுப்பறைகள்

மாணவர்களின் எண்ணிக்கை 20 வரை
அனைத்து நாட்களும், அனைத்து வகுப்புகளும் வாத்தியார்.Lk

மாணவர்களின் எண்ணிக்கை 21 - 40 எனின்
மாணவர்களின் எண்ணிக்கையை இரண்டாக பிரித்து ஒருவாரம் விட்டு ஒருவாரம் மாறி மாறி வகுப்புகள் நடாத்துதல்.

மாணவர்களின் எண்ணிக்கை 40க்கு மேல் எனின்,
மாணவர்களை மூன்னு சமபகுதிகளாக பிரித்து வகுப்புகளை நடாத்துதல். இடவசதிகள் இருப்பின் இரண்டாக பிரித்து வகுப்புகள் நடாத்துதல்.
வாத்தியார்.Lk

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், கல்விசார் ஊழியர்களின் க தலைமையில், கல்விசாரா ஊழியர்கள், தேவையேற்படின் பெற்றோர், பழைய மாணவர்கள், சமூகத்தின் உதவியினைப் பெற்றுக் கொண்டு பாடசாலை சூழலை துப்புரவு செய்தல், தொற்று நீக்கம் செய்தல், வகுப்பறைகளை தயார் படுத்தல் என்பன மேற்கொள்ளப்படல் வேண்டும்.

இதனடிப்படையில் முதல் கட்டமானது எதிர்வரும் ஒக்டோபர் 21 ஆரம்பமாவதுடன், ஏனைய கட்ட ஆரம்பிப்புகள் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்.