'

ஓய்வுதியத் திணைக்களத்தின் அறிவிப்பு (27 நவ 2021)
ஓய்வுதியத் திணைக்களத்திற்கு வருகை தருவோருக்கு விசேட அறிவித்தல் ஒன்றை ஓய்வூதியத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

ஓய்வூதியத் திணைக்களத்துக்கு வருவோர், இயன்றளவு திங்கட் கிழமை வருகை தருமாறு அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை வருகை தரும் ஓய்வூதியம் பெற்றோரின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும். அதற்கேற்ப திங்கட்கிழமை வருகை தருவோருக்கு ஓய்வூதியம் தொடர்பிலான பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள, விடய பொறுப்பு அலுவலர்களை நேரடியாக தொடர்பு கொண்டு, தமது பிரச்சினைகளை முன்வைக்கவும், குறித்த நேரத்திலேயே அதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.