'

2021 க.பொ.த உயர்தர புதிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்தல்2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர புதிய வகுப்புகளுக்கு (12 ஆம் வகுப்புக்கு) அனுமதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட கடிதம் ஒன்றை வௌியிட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கு க.பொ.த உயர்தர வகுப்புகளுக்கு புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தாமதிக்காது ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 12 ஆம் வகுப்புக்கு புதிதாக இணைக்கப்பட்டுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாடசாலைகளில் உள்ள இடவசதிகளைக் கருத்திற் கொண்டு ஆரம்பிக்கப்படல் வேண்டும் என அறியத்தரப்படுகின்றது.

2021 உயர்தர பரீட்சைக்கு முகங்கொடுக்கும் மாணவர்களும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், புதிய தரம் 12 வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு வகுப்பறைகள் மற்றும் ஏனைய வசதிகளை ஏற்படுத்துவதில் பாடசாலைகள் பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம்.

அவ்வாறான பிரச்சினைகள் காணப்படின், பாடசாலை மட்ட கணிப்பீட்டு செயற்றிட்டத்தின் கீழ் உயர்தர வகுப்புகளுக்கான குழு செயற்றிட்டம் அல்லது ஏனைய பாடரீதியான மதிப்பீட்டு மாதிரி கற்றல்- கற்பித்தல் முறைகளை உரிய முறையில் பயன்படுத்தி, வழிகாட்டல்களை வழங்கி உரிய மாணவர்களை அச்செயற்பாடுகளில் ஈடுபடச் செய்ய முடியும் என்பதையும் அறியத் தருகின்றேன்

கல்வி அமைச்சின் செயலாளர்