'

2022 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர் வருகை பதிதல்

மாணவர்களின் வருகை பதிதல் தொடர்பில் பாடசாலைகளில் பயன்படுத்தப்படும் நாளாந்த வரவு ஆவணம் தொடர்பில் விசேட கடிதம் ஒன்று கல்வி அமைச்சின் செயலாளரினால் வௌியிடப்பட்டுள்ளது.

2021 கல்வியாண்டின் சில மாதங்கள் 2022 ஆம் ஆண்டில் நடைபெறுவதால், பாடசாலைகளின் நாளாந்த வரவு ஆவணம் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமை அறியக்கிடைத்துள்ளது. எனவே அது தொடர்பில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

அரச பாடசாலை, அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலை மற்றும் பிரிவெனாக்கள் 2021 கல்வியாண்டுக்காக ஆரம்பிக்கப்பட்ட மேற்படி ஆவணம் அந்த கல்வியாண்டு 2022 வருட நிறைவுறும் தினத்தன்று அதாவது, சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கு 2022.04.08 மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2022.04.01 வரை கொண்டு செல்லப்படல் வேண்டும்.

அதனடிப்படையில் 2022 கல்வியாண்டு ஆரம்பிக்கும் தினத்தில் இருந்து புதிய வரவு இடாப்பு ஆரம்பிக்கப்பட்டு, அவ்வாண்டு நிறைவுறும் தினம் வரை கொண்டு செல்லப்படல் வேண்டும்.

மேற்படி நடைமுறைப்படுத்தப்படும் போது , பிரயோக ரீதியான பிரச்சினைகள் ஏற்படும் சந்தரப்பத்தில் , அது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளரை தொடர்பு கொண்டு உரிய தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்த முடியும்