'

பாடசாலை புத்தகங்களை தரவிறக்கம் செய்தல்

ஒவ்வொரு ஆண்டும் புதிய வருடம் ஆரம்பிக்கும் சந்தரப்பங்களில் மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படுவதுண்டு.

எனினும் சில மாணவர்களுக்கு முன்னைய வருடங்களில் கிடைக்கப்பெற்ற புத்தகங்களே கிடைக்கின்றன. அதே போல் ஆசிரியர்கள் ஆரம்பத்தில் தமக்கு கிடைத்த புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே கற்பிக்கின்றனர்.

புத்தகங்கள் ஒரே மாதிரி காணப்படினும் கூட, அடுத்தடுத்த பதிப்புகள் திருத்தப்பட்ட பதிப்புகளாகவே வௌிவரும்.

எனவே இறுதியாக வௌியிடப்பட்ட பதிப்பை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்களை பயன்படுத்தும் போது முன்னைய பதிப்புகளில் காணப்பட்ட பிழைகள் அநேகமாக நிவர்த்திக்கப்பட்டிருக்கும

பாடசாலைகளினால் அனைவருக்கும் புதிய புத்தகங்களை வழங்க முடியாமல் போனாலும் கூட இறுதியாக வௌிவந்த பதிப்புகளை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

புத்தகங்களை தரவிறக்கம் செய்து கொள்ள பின்வரும் இணைப்பை பயன்படுத்துங்கள்