'

கல்விசாரா ஊழியர்களின் தற்காலிக இடமாற்றக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதுதேசியக் கல்வியியற் கல்லூரி, ஆசிரியர் கல்லூரி, ஆசிரியர் மத்திய நிலையங்கள் மற்றும் தேசிய பாடசாலைகளில் கடமையாற்றும் கல்விசாரா ஊழியர்களின் இணைப்பு இடமாற்றக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

கல்விசாரா ஊழியரகளின் 2022 ஆம் ஆண்டுக்காக வருடாந்த இடமாற்றம் 2022.03.01 அமுலுக்கு வருவதால் , அதனைக் கருத்திற் கொண்டு தமது நிலையான சேவை இடத்திலிருந்து , வேறு பணியிடங்களில் தற்காலிக இணைப்பை பெற்று சேவையாற்றும் கல்விசாரா ஊழியர்களின் தற்காலிக இணைப்பு காலமானது 2022.02.28 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

2022.02.28 இற்குப் பின்னர் குறித்த கல்விசாரா ஊழியர்கள் தமது நிரந்தர பதவியிடங்களுக்கு சமூகமளிப்பது கட்டாயமாகும்.