'

74 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் - 20222022 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள 7 ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதை ஒரு விசேட சந்தரப்பமாகக் கருதி, 2022 பெப்ரவரி 01 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 07 ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்கு, அரச நிறுவனங்களாக செயற்படும் அனைத்து கட்டிடங்களிலும் தேசிய கொடியினை ஏற்றுமாறும் மற்றும் பெப்ரவரி 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் குறித்த கட்டிடங்களை மின்விளக்குகளால் அலங்கரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் மின்சார பிரச்சினையையும் கருத்திற் கொண்டு, பொருத்தமான முறைகளைக் கையாண்டு குறித்த கட்டிடங்களை மின்விளக்குகளால் அலங்கரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்