'

க.பொ.த சாதாரண தர பரீட்சை 2021 விடைத்தாள் திருத்தப்பணி இரண்டாம் பாடத்திற்கு அல்லது இன்னுமொரு மொழிமூலத்திற்கு விண்ணப்பித்தல்2021 க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


விண்ணப்பிக்கும் பாடத்திற்கு மேலதிகமாக இன்னுமொரு மொழிமூல் மதிப்பீடு அல்லது வேறு ஒரு பாடம் ஒன்றை மதிப்பீடு செய்வதாயின் பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்யப்பட்டு தபாலில் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்


வேறு மொழிமூல விண்ணப்பம்
உதாரணமாக தமிழ் மொழி மூல விஞ்ஞான பாட மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர், ஆங்கில மொழி மூல விஞ்ஞான பாடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டுமாயின்,
தமிழ்மொழி மூல விண்ணப்பம் - நிகழ்நிலை விண்ணப்பம்
ஆங்கில மொழி மூல விண்ணப்பம் - பிரத்தியேக பீ.டி.எப் இல் தரப்பட்டுள்ள விண்ணப்பம்

இரண்டாம் பாட விண்ணப்பம்
தமிழ், ஆங்கிலம், அறபு பாட மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் குறித்த இலக்கிய நய பாடங்களுக்கு அல்லது இரண்டாம் மொழி தமிழ் / சிங்கள பாடங்களுக்கு  விண்ணப்பிக்க பிரத்தியேக பீ.டி.எப் இல் தரப்பட்டுள்ள விண்ணப்பம் பயன்படுத்தப்படல் வேண்டும்.


வரலாறு, வர்த்தக பாடத்திற்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் புவியியல், குடியியல், முயற்சியாண்மைக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், பிரத்தியேக பீ.டி.எப் இல் தரப்பட்டுள்ள விண்ணப்பம் பயன்படுத்தல் வேண்டும்.

தமிழ் மொழி மூல அறிவுறுத்தல்


இரண்டாம் மொழி மூலம் அல்லது இரண்டாவது பாடத்திற்கான விண்ணப்பத்தினை பெற கீழ்வரும் படத்தை அழுத்தவும்