'

க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் அறிவித்தல்
2021 க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றினை வௌியிட்டுள்ளது.

மேற்படி பரீட்சையானது 23.05.2022 தொடக்கம் 01.06.2022 வரை நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகள் குறித்த பாடசாலைகளுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகள் அவர்களினால் வழங்கப்பட்ட முகவரிக்கும் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

2022 மே மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத பாடசாலைகள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் பரீட்சைத் திணைக்களத்தை தொடர்பு கொள்ளல் வேண்டும்.

அனுமதி அட்டையில் பாடம், மொழிமூலம், பெயர் என்பவற்றில் மாற்றங்கள் செய்ய வேண்டி இருப்பின் பரீட்சைத் திணைக்கள இணையத்தளத்தில் அவற்றை மேற்கொள்ள முடிவதுடன், இதற்காக 14 மே 2022 நள்ளிரவு 12 மணி வரை சந்தர்ப்பம் வழங்கப்படும்

பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபரூடாகவும், தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தாமாகவும் மேற்படி திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.