ஜுன் 27 இலிருந்து ஜுலை 01 வரை பாடசாலைகள் நடைபெறும் விதம் தொடர்பில் கல்வி அமைச்சு சிங்கள மொழி மூலத்தில் கடிதம் ஒன்றை வௌியிட்டுள்ளது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பு பின்வருமாறு.
2022 ஜூன் 27 தொடக்கம் ஜூலை 01 வரை பின்வரும் அடிப்படையில் பாடசாலைகள் நடைபெறும்.
1. 2022.06.20 தொடக்கம் 2022.06.24 வரை கிராமப் பிரதேச பாடசாலைகள் நடைபெற்ற விதத்திலேயே மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் போக்குவரத்து பிரச்சினைகளற்ற பாடசாலைகள் சாதாரண நிலைமைகளைப் போன்று நடைபெறல் வேண்டும். போக்குவரத்து பிரச்சினைகள் உள்ள ஆசிரியர்கள் இருப்பின் அவர்களுக்காக பாடசாலை அதிபர்கள் அவ்வாசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறையிலிருந்து விலக்களித்து நெகிழ்வான கால அட்டவைண வழங்கல் வேண்டும்.
vaathiyar.lk
2. கடந்த வாரம் நடைபெறாத நகர்ப்புற பாடசாலைகள் வாரத்திற்கு மூன்று நாள், அதாவது செவ்வாய், புதன், மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் காலை 7.30 தொடக்கம் பி.ப 1.30 வரை நடைபெறல் வேண்டும். குறித்த பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு நடாத்தும் தினங்கள் தொடர்பில் பாடசாலைகள் அதிபர்கள் முடிவெடுத்தல் வேண்டும்.
பாடசாலை நடைபெறாத தினத்தில் நிகழ்நிலை மூல கற்பித்தல், ஒப்படைகள், வீட்டை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகள் மூலம் கற்பித்தல் நடைபெறல் வேண்டும். vaathiyar.lk
3. போக்குவரத்து பிரச்சினைகள் உள்ள ஆசிரியர்களுக்கு , அவர்களால் பாடசாலைக்கு வர முடியாது விடின் இத்தினங்களில் தனிப்பட்ட விடுமுறையிலிருந்து விலக்கழிக்கப்படல் வேண்டும்.
vaathiyar.lk
4. 2022.06.20 தொடக்கம் 2022.06.24 வரை போக்குவரத்து பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த சந்தர்ப்பத்திலும், பாடசாலைகள் நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கல்வி அமைச்சு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
vaathiyar.lk
0 கருத்துகள்