'

பாடாசலைகள் தொழிற்படும் விதம் (ஜூன் 27 தொடக்கம் ஜூலை 01 வரை)


பாடசாலைகள் நடாதத்தப்படுவது தொடர்பான புதிய அறிவித்தல்
நகர்ப்புற பாடசாலைகள் இவ்வாரமும் மூடப்படும்.


கல்வி அமைச்சானது 26 ஜூன் 2022 விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.

2022 ஜூன் 27 தொடக்கம் ஜூலை 1 வரை பாடசாலை நடைபெறுவது தொடர்பான முன்னைய அறிவித்தலில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

கொழும்பு வலயப் பாடசாலைகள் மற்றும் அதனை அண்மித்த நகரப் பாடசாலைகள், மற்றும் இதர மாகாணங்களின் பிரதான நகர பாடசாலைகள் அனைத்தும் கடந்த வாரத்தைப் போன்று 2022 ஜூன் 27 தொடக்கம் ஜூலை 01 வரை  நடைபெற மாட்டாது.

2022 ஜூன் 27 தொடக்கம் ஜூலை 01 வரை கடந்த வாரத்தைப் போன்று கிராமப் புற பாடசாலைகள் நடைபெற்ற விதத்தில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் போக்குவரத்து பிரச்சினைகள் இல்லையெனின், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய தினங்களில் பாடசாலைகள் நடாத்த முடியும். போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக ஆசிரியர்க் வருகை தராதவிடத்து அவர்களின் தனிப்பட்ட விடுமுறையில் அவற்றை பதிய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகின்றது.

இவ்வாரத்தில் பாடசாலைகள் நடாத்துவது தொடர்பில் ஏதும் பிரச்சினைகள் ஏற்படின், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மூலம் மாகாண ஆளுநருக்கு அறிவித்து அதனடிப்படையில் அம்முடிவுகளை நடைமுறைப்படுத்த முடியும்

2022 ஜூன் 27 ஆம் திகதி ஆரம்பிக்கும் வாரத்தில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு தவணைப் பரீட்சை நடைபெற ஏற்பாடுகள் செய்திருப்பின் அவற்றை இரண்டு வாரங்களுக்கு பிற்போடுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.