அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவது தொடர்பில் கடிதம் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
அரச அலுவகங்களுக்கு அலுவலர்களை அழைப்பதை மட்டுப்படுத்தல் எனும் தலைப்பில் அமைச்சரவை செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு இக்கடிதம் வௌியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 2022.06.17 ஆம் திகதி வௌியிடப்பட்ட 16-2022 சுற்றறிக்கை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றும்
அன்றாட நடவடிக்கைகளுக்கான போக்குவரத்து தொடர்பில் பொதுமக்களுக்கு நேர்ந்துள்ள குழப்பான நிலைமையில், அத்தியாவசிய சேவைக்கு முன்னுரிமை அளித்து, மீண்டும் அறிவிக்கப்படும் வரை மேற்படி சுற்றுநிருபம் பிரகாரம் அலுவலக அன்றாட நடவடிக்கைகள் பாதிப்பு ஏற்படாத வகையில் தேவைப்படும் மிகக்குறைந்த ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் படியும், இயலுமான அனைத்து சந்தரப்பங்களிலும் ஊழியர்களை வீட்டிலிருந்து நிகழ்நிலையில் கடமை புரியவும் முன்னுரிமை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பணியாற்றும் நிறுவனங்கள் தொடர்பில் குறித்த அலுவலர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் அமைச்சு செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்களின் அறிவுறுத்தல் பிரகாரம் அவர்களின் நெருங்கிய றே்பார்வையின் கீழ் முடிவுகள் எடுக்கப்படல் வேண்டும்.
இக்காலப்பகுதியில் எரிபொருள் பாவனையை மிகக்குறைந்தளவு பயன்படுத்தும் வகையில் அலுவலர்களின் போக்குவரத்துக்ள திட்டமிடப்படல் வேண்டும். அனைத்து கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டங்கள் நிகழ்நிலையில் நடாத்தப்படல் வேண்டும்.
மற்றும் நாட்டின் அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்புறா வண்ணம் முடிவுகள் எடுக்கப்படல் வேண்டும்.
தமிழ் சுற்றறிக்கையை பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்
0 கருத்துகள்