'

பாடசாலைகள் வாரத்திற்கு மூன்று நாள் (ஆகஸ்ட் 01 தொடக்கம் 05 வரை)வருகின்ற வாரமும் 3 நாட்கள் பாடசாலை நடைபெற கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

2022.08.01 முதல் 2022.08.05 வரையுள்ள காலப்பகுதியில் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் பாடசாலைகளை நடாத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் போது புதன் மற்றும் வௌ்ளிக்கிழமைகளில் வீட்டை அடிப்படையாகக் கொண்ட கற்றல் செயற்பாடுகள், அல்லது நிகழ்நிலை கற்பித்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்

போக்குவரத்து பிரச்சினைகளற்ற பாடசாலைகளின் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் விருப்பின் பிரகாரம், வலய கல்விப் பணிப்பாளரின் அனுமதியினைப் பெற்றுக் கொண்டு புதன் மற்றும் வௌ்ளிக்கிழமைகளில் பாடசாலைகள் நடாத்தப்பட முடியும். இதன் போது குறைந்தது மூன்று நாட்களுக்கு ஆசிரியர்கள் வருகைதரும் வண்ணம் கால அட்டவணை தயாரிக்கப்படல் வேண்டும்.