'

உயர்தர பரீட்சைக்கு மாணவரின் வரவு 80 % மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது2023 ஆம் வருடம் தொடக்கம் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் வரவு 80% கடடாயம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளரின் ED/09/Ads (SA)/7 ஆம் இலக்க 2022.08.12 ஆம் திகதிய கடிதத்தின் பிரகாரம் , 2022 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதுபவர்களுக்கு மாத்திரமே 80 % வருகை உறுதிப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் மேற்படு விடுவிப்பானது 2022 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவோருக்கு மாத்திரமே ஏற்புடையதாகும். 2023 ஆம் வருடம் தொடக்கம் உயர்தர பரீட்சை எழுதுபவர்களுக்கு 80 % பாடசாலை வருகை உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என இவ்வறிவித்தல் சுட்டிக் காட்டியுள்ளது