'

தேசிய பாடசாலை ஆசிரிய இடமாற்றம் தொடர்பிலான அறிவிப்பு

 தேசிய பாடசாலை ஆசிரிய இடமாற்றம் தொடர்பில் 2023.04.17 ஆம் திகதி கல்வி அமைச்சு தேசிய பாடசாலை அதிபர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது

2023.03.23 ஆம் திகதி வௌியிடப்பட்ட அறிவித்தலுக்கு மேலதிகமாக இவ்வறிவிப்பு விடுக்கப்படுகின்றது.

02. 2022 ஆம் ஆண்டு வருடாந்த இடமாற்றத்தின் போது இம்முறை உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கு முகங்கொடுக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் ஏற்படும் இடைஞ்சல்களை அறிந்து கொள்வதற்காக விசேட மேன்முறையீட்டு குழு நியமிக்க இதற்கு முன்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

03. எனினும் இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களுக்கு பதிலாக பதிலீட்டாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் , இதுவரை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க இடையூறுகள் இடம்பெறாமையால் கல்வி அமைச்சின் செயலாளரின் மூலம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்ற கடிதங்களின் பிரகாரம் அவர்களை சேவையில் இருந்து விடுவிப்பு செய்வதற்கும், இடமாற்ற மூலம் பாடசாலைக்கு வரும் ஆசிரியர்களுக்கு கடமைப் பொறுப்புகளை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றேன்.

04. பாட ரீதியில் கடமைப் பொறுப்புகளை மேலதிக ஆளணியினர் காரணமாக வழங்க முடியாது விடின், மேலதிக ஆளணி தொடர்பான தரவுகளுடன் கல்வி அமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவிக்கவும்

(சிங்கள கடிதத்தின் மொழிபெயர்ப்பு)