'

2023 உயர்தர பரீட்சை விண்ணப்பம்

 2022 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு மற்றும் 2023 க.பொ.த உயர்தர பரீட்சை விண்ணப்பம் தொடர்பாக பரீட்சைத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றினை வௌியிட்டுள்ளது

2023 க.பொ.த உயர்தர பரீட்சை 27.11.2023 தொடக்கம் 21.12.2023 வரை நடைபெறும். இதற்காக நிகழ்நிலை விண்ணப்பங்கள் 07.07.2023 தொடக்கம் 28.07.2023 வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

மேற்படி கால எல்லைக்குள் முதற்தடவையாக பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்குப் பின்னர் முதற்தடவையாக விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்படமாட்டாது.

இரண்டாவது, மூன்றாவது தடவை விண்ணப்பிப்பதற்காக 2022 உயர்தர பரீட்சைக்கு  தோற்றிய மாணவர்களுக்கு மாத்திரம் அவர்களின் பெறுபேறுகள் வௌியிட்டதன் பின்னர் சந்தரப்பம் வழங்கப்படும்.