'

பணம் அறவிட்டு தமது மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு நடாத்திய ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

தமது வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பணம் அறவிட்டு மேலதிக வகுப்புகள் நடாத்துவதை மத்திய மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்ைக மூலம் தடுத்துள்ள நிலைமையில் அதனை மீறிய ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதான இன்றைய தேசிய றாளிதழ்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர்களுக்கு தமது வகுப்பில் கற்கும் மாணவர்களுக்கு பணம் அறவிட்டு மேலதிக வகுப்புகள் நடாத்துவதை சுற்றறிக்கை மூலம் மத்திண மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ள நிலைமைகளின் கீழ், அதை மீறும் வகையில் மேலதிக வகுப்புகளை நடாத்திய கண்டி பிரதேச 8 பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேற்படி சுற்றறிக்கையை மீறி செயற்பட்ட 8 ஆசிரியர்களும் குறித்த பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களாகும். குறித்த ஆசிரியர்களுக்கு வேறு பாடசாலைக்கு இடமாற்றம் வழங்குவதுடன், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாகாண கல்வி அமைச்சின்  செயலாளர் அறிவுரை விடுத்துள்ளார்.

குறித்த சுற்றறிக்கை மீறி மேலதிக வகுப்புகளை நடாத்தும் ஆசிரியர்கள்  தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகளுக்கு ஏற்ப குறித்த பிரதேசங்களை கண்காணிக்க மாகாண கல்வி அமைச்சினால் விசேட பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்படி சுற்றறிக்கை மத்திண மாகாண கல்வி அமைச்சினால் மாகாண பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதால், தேசிய பாடசாலை ஆசிரியர்கள் எவ்வித பயமுமின்றி தமது வகுப்பு மாணவர்களுக்கு பணம் அறவிட்டு மேலதிக வகுப்புகள் நடாத்துவதுடன், குறித்த வகுப்புகளில் கலந்து கொள்ளுமாறு வற்புறுத்தலும் செய்வதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.