'

திருடப்பட்ட பொருட்களின் இணைய மூல விற்பனை
திருடப்பட்ட பொருட்கள் இணையத்தளத்தில் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர். இலத்திரனியல் சாதனங்கள், நகைகள், புத்தகங்கள் என்பன இவ்வாறு விற்பனை செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

​தொலைபேசி தொலைந்த பின்னர் அது தொடர்பாக முறைப்பாடு செய்யவும், அல்லது பாவித்த தொலைபேசி ஒன்றை வாங்கும் போது அது திருடப்பட்ட தொலைபேசியா என்பதை பரீட்சிப்பதற்கும் பின்வரும் இணைப்பை பயன்படுத்தலாம்.

மொபைலின் IMEI இலக்கத்தைப் பெற *#06# அழுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

பின்வரும் இணைப்பை அழுத்தவும்

பின்வரும் இணைப்பில் IMEI இலக்கத்தை செலுத்த அது களவாடப்பட்ட தொலைபேசியா என்பதை அறிந்து கொள்ளலாம்.