'

பாடசாலை மாணவர்கள் மற்றும் வளர்ந்தோருக்கானபோட்டிகள் ( தொழில் வழிகாட்டல் வாரம்)2021 அக்டோபர் 04 முதல் 2021 அக்டோபர் 10 வரை கொண்டாடப்படவுள்ள தொழில்வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பப் படிவங்கள் ஏற்கும் காலஎல்லை
23 ஆகஸ்ட் 2021 - 12 செப்ரம்பர் 2021

வழங்கப்படும் மின்னஞ்சல் முகவரிக்கு மாத்திரமே போட்டித் தகவல்கள் வழங்கப்படும். எனவே சரியான மின்னஞ்சல் முகவரிகள் வழங்கப்படல் வேண்டும்.

நடைபெறும் போட்டிகள்
சித்திரம்
பேச்சு
கட்டுரை
கவிதை
வினாவிடை

பாடசாலை மாணவர்களுக்கான போட்டிகள்
தரம் 9,10 11 வகுப்பு மாணவர்கள் மாத்திரம் கலந்து கொள்ளலாம்

திறந்த - கட்டுரைப் போட்டி
திறந்த கட்டுரைப் போட்டியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்குபற்றலாம்.

விண்ணப்பப்படிவங்களுக்கு கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்


ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் பங்கு பற்றுவதாயின், ஒவ்வொரு போட்டிக்கும், தனித்தனி விண்ணப்பங்கள் நிரப்பப்படல் வேண்டும்.


மேலதிக தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.