'

பாடசாலை முகாமைத்துவம் தொடர்பான குறுங்கால பாடநெறி - திறந்த பல்ககலைக்கழகம்
பாடசாலை முகாமைத்துவம் தொடர்பிலான குறுங்கால பாடநெறிக்கு, இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கை அதிபர் சேவை, இலங்கை கல்வி நிர்வாக சேவை மற்றும் அதற்கு இணையான சேவை தரங்களுடைய விருப்பமுடைய அலுவலர்கள் விண்ணப்பிக்க முடியும்.

மொழிமூலம் - தமிழ் | ஆங்கிலம் | சிங்களம்
முறை - நிகழ்நிலை
விண்ணப்ப முடிவு - 30 டிசம்பர் 2021
பாடநெறிக் கட்டணம் - 25000
காலம் - 3 மாதங்கள்


உள்ளடக்கம்

 1. கல்வி முகாமைத்துவ கோட்பாடுகள் மற்றும் பிரயோகங்கள்
 2. 21 ஆம் நூற்றாண்டுக்கான பாடசாலை தலைமைத்துவம்
 3. பாடசாலை மட்ட திட்டமிடல் மற்றும் அமுல்படுத்தல்
 4. பாடசாலை மட்ட மேற்பார்வையும், கண்காணிப்பும்
 5. பாடசாலை அளவீடும் , மதிப்பீடும்
 6. பாடசாலையின் மனிதவள முகாமைத்துவம்
 7. பாடசாலை கலைத்திட்ட முகாமைத்துவம்
 8. முரண்பாட்டு முகாமையும், வேலை-வாழ்வு சமநிலையும்
 9. மாற்ற முகாமைத்துவம்
 10. கல்விச்சட்டங்களும் பிரயோகமும்
 11. பாடசாலை நிதி முகாமைத்துவம்
 12. கல்வி தலைமைத்துவம் மற்றும் முகாமைக்கான தகவல் தொடர்பாடல் தொழினுட்பம்

விண்ணப்பப் படிவம் பின்வரும் இணைப்பில்


மேலதிக தகவல்கள் பின்வரும் இணைப்பில்