'

2022 ஜூன் 20 தொடக்கம் 24 வரை பாடசாலை நடைபெறும் விதம்





கல்வி அமைச்சு மற்றும் கல்வி அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் 2022 ஜூன் 20 தொடக்கம் 24 வரை பாடசாலை நடைபெறும் விதம் சம்பந்தமாக பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

1. பிரதேச ரீதியாக குறைந்த எண்ணிக்கையுள்ள மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்களுக்கு போக்குவரத்து பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் அப்பாடசாலைகளை நடாத்திச் செல்ல மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2. அதே போன்று பாடசாலைக்கு வருகை தர முடியாத ஆசிரியர்கள், மாணவர்களின் எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு அதனடிப்படையில் குறித்த பாடசாலை அதிபர்கள் வலயக் கல்விப் பணிப்பாளருடன் கலந்துரையாடி பொருத்தமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

3. பாடசாலை நடைபெற்றாலும், யாதும் மாணவர் குழுக்களுக்கு பங்குபற்ற முடியாமல் போனால் அவர்களுக்கு நிகழ்நிலை கற்றல் வாய்ப்புகள் இருப்பின் அவற்றைப் பயன்படுத்தி கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள  சந்தர்ப்பம் உண்டு.

4. மேல் மாகாண கொழும்பு வலயம் மற்றும் அண்மித்த நகர்ப்புற மற்றும் ஏனைய மாகாணங்களின் பிரதான நகரங்களில் அமைந்துள்ள பாடசாலைகள் இவ்வாரம் நடைபெற மாட்டாது. பிரதான நகரமற்ற பாடசாலைகள் நடைபெறுவது தொடர்பில் குறித்த மாகாண கல்வி அதிகாரிகளுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

5. வாரந்தோறும் நிகழ்நிலை கற்றல் நடைபெறுவதற்காக காலை 8 மணி தொடக்கம் பி.ப 1 மணி வரை மின்துண்டிப்பு நடைபெற மாட்டாது

இக்காலப்பகுதியில் அதிபர் ம்றும் ஆசிரியர்கள் மூலம் தன்னார்வ அடிப்படையில் வழங்கப்படும் பணி தொடர்பில் கல்வி அமைச்சு வரவேற்பதுடன், அதை அவ்வாறே கருத்திற் கொண்டு கடமையாற்றும் படி மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாரத்தில் நடைபெறும் செயற்பாடுகளை கருத்திற் கொண்டு , அது தொடர்பில் கலந்தாலோசித்து அடுத்த வார நடவடிக்ைககள் தொடர்பில் அறியத்தரப்படும்