'

மூன்று மாதங்களுக்கு அரச நிறுவனங்கள் வௌ்ளிக்கிழமைகளில் மூடப்படும்விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்காக அரச அலுவலர்களுக்கு வௌ்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நிகழும் எரிபொருள் நெருக்கடி காரணமாக போக்குவரத்துக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளமையால் , அதனடிப்படையில் அரச அலுவலர்களுக்கு தமது போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வாராந்தம் ஒரு நாள் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் உணவு பற்றாக்குறைக்கு தீர்வாக தமது வீட்டுத் தோட்டத்தில் அல்லது வேறு ஒரு இடத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு , வௌ்ளிக்கிழமைகளில் அரச நிறுவனங்களை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் பின்வரும் நிறுவனங்கள் மூடப்பட மாட்டாது. வழமை போன்று செயற்படும்.
நீர் வழங்கல் சேவை
மின்சார சேவை
சுகாதார சேவை
பாதுகாப்பு சேவை
கல்விச் சேவை
துறைமுக சேவை
விமான நிலையச் சேவை
போக்குவரத்துச் சேவை