'

போக்குவரத்து பிரச்சினை காரணமாக ஆசிரியர்களுக்கு சலுகை வழங்கல்
நாட்டில் நிலவும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக ஆசிரயர்களுக்கு சலுகை வழங்ககும் விதமாக , பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட வகையில் குறித்த ஆசிரியர்களின் கோரிக்கைகளை கவனத்திற் கொண்டு வசதியான பாடசாலைக்கு தற்காலிக சேவை இணைப்பை வழங்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


கல்வி அமைச்சினால் மாகாண அரச சேவை ஆணைக்குழு செயலாளர்களுக்கும், மாகாண கல்விச் செயலாளர்களுக்கும், மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும், வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும், தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் கடிதம் மூலம் அறிவிக்கின்றது.

1 அடிப்படை விடயங்கள்

குறித்த மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கிடையில் மற்றும் தேசிய - மாகாண பாடசாலைகளுக்கிடையில் ஆசிரியர்களை இணைப்புச் செய்யும் அதிகாரம் குறித்த மாகாண கல்விப் பணிப்பாளருக்கு வழங்கப்படுகின்றது.

மாகாணங்களுக்கிடையில் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான இணைப்பை வழங்கும் அதிகாரம் குறித்த மாகாண மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளரின் பணிப்புரையின் கீழ் வழங்கப்படல் வேண்டும்.

மாகாணங்களுக்கிடையிலான தேசிய பாடசாலை இணைப்புக்கு கல்வி அமைச்சின் ஆசிரிய இடமாற்ற கல்விப் பணிப்பாளரின் மூலம் வழங்கப்படல் வேண்டும்.


மேற்படி அனைத்து இணைப்புகளும், பாடசாலை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு இடையூறாக அமையாத வண்ணம், குறித்த இரண்டு பாடசாலை அதிபர்களினதும் எழுத்து மூல அங்கீகரிப்புடன் மாத்திரம் மேற்கொள்ளப்படல் வேண்டும்.


நிபந்தனைகள்

  1. குறித்த ஆசிரியர் பாடசாலையில் மேலதிகம் எனின், அவருக்கான பிரதியீட்டாளர் அவசியமில்லை
  2. குறித்த ஆசிரியர் மேலதிமானவர் இல்லை எனின், பொருத்தமான பிரதியீட்டாளரை வழங்கிய பின்னர் இணைப்பு வழங்கப்படல் வேண்டும்.
  3. அதிபர்களின் ஒருமைப்பாட்டுடன் மேற்கொள்ளப்படும் பரஸ்பர இடமாற்றம் நடைபெறுவது போன்று, அதனை அடிப்படையாகக் கொண்டு இணைப்புகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
  4. கர்ப்பிணிகளுக்கான இணைப்பு குறித்த வைத்திய பணிப்புரையின் பேரில், வைத்திய சான்றிதழுடன் 2007/20 சுற்றறிக்கையின் 3,4,II இன் பிரகாரம் வழங்கப்படல் வேண்டும்.
  5. மாகாண கல்விப் பணிப்பாளரினால் தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்புட் இணைப்புக் கடித பிரதி கல்வி அமைச்சின் கல்விப் பணிப்பாளர் (ஆசிரியர் இடமாற்றம்) இற்கு அனுப்பப்படல் வேண்டும்.
  6. இணைப்புகள் யாவும் 31.12.2022 வரை மாத்திரம் வழங்கப்படல் வேண்டும்.
மேற்படி இணைப்புகள் குறித்த பாடசாலைக்கு இடமாற்றம் கிடைப்பதற்கான உத்தரவாதம் அற்றதுடன் குறித்த ஆசிரியரின் சம்பளம் நிலையான சேவை நிலையத்திற்கே வழங்கப்படும்.