'

தேசிய பாடசாலை மாணவர்களை அருகிலுள்ள தேசிய பாடசாலைக்கு இணைப்பு செய்தல்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் போக்குவரத்து நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, தேசிய பாடசாலை மாணவர்களை, அருகிலுள்ள தேசிய பாடசாலைக்கு 31 டிசம்பர் 2022 வரை தற்காலிக இணைப்பின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ள கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. தேசிய பாடசாலை அதிபர்களுக்கு வௌியிடப்பட்ட விசேட கடிதம் மூலம் கல்வி அமைச்சு மேற்படி தகவலை வௌியிட்டுள்ளது.

இணைப்பு பாடசாலை வழங்கும் போது தரம் 5 புலமைப் பரிசில் வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் வெட்டுப்புள்ளி அதிகமான பாடசாலையிலிருந்து, வெட்டுப்புள்ளி குறைந்த பாடசாலைக்கு தற்காலிக இணைப்பு மேற்கொள்ளப்படும்