'

பாடசாலை மாணவர்களை போதைப் பொருள் பாவனையிலிருந்து விடுவித்தல்பாடசாலை மாணவர்களை போதைப் பொருள் பாவனையிலிருந்து விடுவித்தல் சம்பந்தமாக கல்வி அமைச்சு விசேட ஊடக வௌியீடு ஒன்றை வௌியிட்டுள்ளது. சிங்கள மொழிமூல ஆவணத்தின் மொழிபெயர்ப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தற்காலத்தில் மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை பரவக்கூடிய சாத்தியங்கள் இருப்பதால் அதற்கு தேவையான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு எடுத்து வருகின்றது.

கல்வி அமைச்சினால் 2020.07.29 ஆம் திகதி வௌியிடப்பட்ட 20/2020 சுற்றறிக்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு மீண்டும் ஒருமுறை பாடசாலை அதிபர்களை அறிவுறுத்த கல்வி அமைச்சு முடிவெடுத்துள்ளது. அதே போல் பாடசாலை, வலய, மாகாண மட்டங்களில் போதைப்பொருள் தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பொருத்தமான பொறிமுறை மூலம் போதைப் பொருள்களை பாடசாலை சூழலிலிருந்து இல்லாதொழிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் பாடசாலைக்கு வருபவர்கள் மற்றும் மாணவர்களின் புத்தகப் பைகளை பரீட்சிக்க தேவைறே்படின் பாடசாலை ஆசிரியர்கள், மாணவத் தலைவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்து சங்க பிரதிநிதிகள் என்போர் கொண்ட குழு ஒன்றினால் அக்கடமையை செய்வதற்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. போதைப் பொருள் பாவனையாளர்களை இனங்காணல், அவர்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைள் தொடர்பில் ஆசிரியர்களை அறிவுறுத்த விசேட வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக நடாத்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.