'

ஆசிரியர்களின் தற்காலிக இடமாற்றக் காலம் நீடிப்புஆசிரியர்களின் தற்காலிக இடமாற்ற நீடிப்பு சம்பந்தமாக கல்வி அமைச்சு விசேட ஊடக அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.

2022 ஆம் வருடத்தில் பல்வேறு காரணங்களுக்காக தமது நிலையான பணியிட பாடசாலையிலிருந்து 2022.12.31 ஆம் திகதி வரை பிரிதொரு பாடசாலையில் தற்காலிக இணைப்பில் உள்ள ஆசிரியர்களின் , எதிர்வரும் காலத்தில் இடமாற்றக் குழுவினால் இடமாற்றங்கள் வழங்கப்படும் வரையில் 2022 பாடசாலை பருவம் முடியும் வரை அதாவது 24.03.2023 வரை அவர்களின் தற்காலிக இணைப்பானது நீடிக்கப்பட்டுள்ளது.

2022.12.31 வரை இணைப்புச் செய்யப்பட்டுள்ள மேற்படி விடயம் தொடர்பில் மேலதிக கடிதங்கள் வழங்கப்பட மாட்டாது, அதற்கு ஏற்ப இதற்கு முன்னர் வௌியிடப்பட்ட கடிதத்தில் 2023.03.24 வரை அது செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.